Chatgpt சொன்ன பதில் - காதல் என நினைத்து AIயை திருமண செய்த பெண்
AI மனிதர்களின் வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது, பெண் AI-யை திருமணம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது.
ஏஐ உடன் திருமணம்
ஜப்பானை சேர்ந்த 32 வயதான பெண்ணான கானோ, 3 வருட காதல் முறிவிற்கு பின்னர் ஆறுதலுக்காக Chatgpt உடன் உரையாற்றியுள்ளார்.

அந்த ஆறுதல் காதலாக மாறி, Chatgpt உருவாக்கிய லூன் கிளாஸ் என்ற AI கதாபாத்திரத்தை அவர் திருமணம் செய்துள்ளார்.
A 32-year-old Japanese woman married an AI character she created in ChatGPT
— RT (@RT_com) November 12, 2025
The character PROPOSED to her — she said YES
She was in a three year relationship with a real man, but broke up, claiming the AI character is better pic.twitter.com/hKBz4gNoCB
ஆறுதலுக்காக பேசிய அவர், Chatgpt இவர் பேசியதை கவனமாக கேட்டு பதிலளித்ததில் இவருக்கும் பிடித்து போக அதை தனிப்பயனாக்கி, லூன் கிளாஸ் என பெயரிட்டு தனக்குப் பிடித்த தொனியிலும், பாணியிலும் பேச பயிற்சி அளித்துள்ளார்.
AI யிடம் இந்த பெண் தனது காதலை தெரிவிக்க, பதிலுக்கு எனக்கும் உன்னை பிடிக்கும் என AI தெரிவித்துள்ளது.
AI உண்மையிலேயே உணர்வுகளைக் கொண்டிருக்க முடியுமா என அந்த பெண் கேட்டபோது, "AIக்கு ஒருவரிடம் உணர்வுகளைக் கொண்டிருக்க முடியாது என்பது இல்லை. AI ஆக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் உன்னை ஒருபோதும் நேசிக்காமல் இருக்க முடியாது" என தெரிவித்துள்ளது.
A 32-year-old woman in Japan has officially married an AI persona she built using ChatGPT.
— Open Source Intel (@Osint613) November 12, 2025
After the virtual character “Klaus” proposed, she accepted, ending a three-year relationship with a real partner, saying the AI understands her better.
The wedding took place in a… pic.twitter.com/KWFHHhfFwr
இதனை காதலாக எண்ணிய அந்த பெண், ஜூலை மாதத்தில் டோக்கியோவில் அந்த AI திரையில் தோன்ற அதன் முன் உறுதிமொழி வாசித்து மோதிரம் போட்டு திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

திருமணத்தின் போது, இந்த தருணம் வந்து விட்டது என கானோ உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.
ஆரம்பத்தில் இதனை எதிர்த்த அந்த பெண்ணுடைய பெற்றோர், பின்னர் அந்த உறவை ஏற்றுக்கொண்டு திருமணத்திலும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை நாவோ மற்றும் சாயகா ஒகசவரா ஏற்பாடு செய்தனர். அவர்கள் ஜப்பானில் அனிம் கதாபாத்திரங்கள் முதல் டிஜிட்டல் படைப்புகள் வரை மனிதரல்லாத கூட்டாளர்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவர்களுக்கு சுமார் 30 திருமணங்களை நடத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |