omicron பரவலால் உலகம் முழுவதும் 3,400 விமான சேவை ரத்து! பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி கொண்டு வருவதனால் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இதன்படி உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் பெரும்பாலானவை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆகும்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி நேற்றும், இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட் எடுத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த 1,259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன் உள்பட பல நகரங்களில் உள்ள விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலைக்கு வராததாலும், சிலர் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாலும் விமான சேவை நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். சில விமான நிலையங்களில் விமானங்கள் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் பல பயணிகள் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றனர்.
இதனால் உலகம் முழுவதும் 3,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அதன் மூலம் கிடைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.