மக்கள் மீது அதிவேகமாக மோதிய கார்! 35 பேர் உடல்நசுங்கி பலியான கொடூரம்
சீனாவில் விளையாட்டு அரங்கம் அருகே மக்கள் மீது கார் அதிவேகமாக மோதியதில் 35 பேர் பலியாகினர்.
அதிவேகமாக மோதிய கார்
Zhuhai நகரில் உள்ள விளையாட்டு மையத்திற்கு வெளியே பாதசாரிகள் பலர் கூடியிருந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மக்கள் கூட்டத்தின் மீது அதிவேகமாக மோதியது.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
62 வயது சாரதி கைது
திங்கட்கிழமை மாலையில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, காரை ஓட்டிய 62 வயது சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சீனாவின் பாரிய வருடாந்திர விமான கண்காட்சி நடைபெற இருந்த நேரத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |