இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! வெளியான அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெண்களுக்கு 35% சதவீதம் பாதுகாப்பு இல்லை என்று அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கராச்சி நகரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள சுமார் 18 ஆயிரம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்த்ப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் பாகிஸ்தான் நாட்டில் 35 சதவீத பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளிப்படையாக கருத்தை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் 45 சதவீத பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக இருப்பதாகவும், அதில் 20 சதவீத பெண்கள் முழுமையாக பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கைபர் பக்துன் இக்வா பகுதியில் 40 சதவீதம் பெண்களுக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லை என்றும் 35 சதவீதம் பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக இருப்பதாகவும் 19 சதவீதம் பெண்கள் முழுமையாக பாதுகாப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் நகரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று 35 சதவீதம் பேரும் ஓரளவு பரவாயில்லை என்று 41 சதவீதம் பேரும் நாங்கள் முழு பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டில் வசிக்கும் பெண்களே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளிப்படையாக கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.