உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம்! 6 மணி நேரத்தில் கட்டி அசத்திய ஜப்பான்
ஜப்பானின் ஒசாகா நகரில், அரிடா ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பழைய மரத்தாலான கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதிநவீன முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் 6 மணி நேரத்தில் ஒரு புதிய ரயில் நிலையத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த தனித்துவமான வேலைப்பாடு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தின் சாதனை
இந்த புதிய ரயில் நிலையம், முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெறுகிறது.
இந்த அதிநவீன தொழில்நுட்பம், கட்டுமானத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ரயில் நிலையத்தை உருவாக்கிய ஜப்பானின் செரெண்டிக்ஸ் வீட்டு வசதி நிறுவனம், இந்த முப்பரிமாண கட்டிடம் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என்று தெரிவித்துள்ளது.
World’s First 3D-Printed Train Station in Japan
— DrDémọ́lá (@drdemola01) April 3, 2025
On Wednesday, March 26, 2025, West Japan Railway (JR West) achieved a feat by building a train station structure that consists of parts made with 3D printer technology. Now, the building, pic.twitter.com/GZ2kiWqGNq
பொதுமக்களுக்கான திறப்பு
மேற்கு ஜப்பான் ரயில்வே நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த நவீன ரயில் நிலையம் ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.
இந்த திட்டம், ரயில் நிலைய கட்டுமானத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |