வீட்டிலேயே 3டி பிரிண்டிங் துப்பாக்கி தயாரித்த இளைஞர் கைது!
அவுஸ்திரேலியாவில் வீட்டிலேயே 3டி பிரிண்டிங் மூலம் துப்பாக்கியை உருவாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 3டி பிரிண்டர் மூலம் வீட்டில் தயாரித்ததாகக் கூறப்படும் முழுமையாக செயல்படும் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 3-ஆம் திகதி பெர்த் நகரத்தின் வடகிழக்கில் உள்ள பேஸ்வாட்டரில் உள்ள ஒரு வீட்டிற்குள் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிப் படை துப்பறியும் நபர்களால் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீரர்கள், ஆயுதங்களை இழந்து, பழைய டாங்கிகளை தேடும் நிலையில் ரஷ்யா!
இந்த துப்பாக்கி பொம்மையை ஒத்திருந்தாலும், சமூகத்தில் கடுமையான தீங்கு விளைவிக்கும் திறன் உள்ளது என்று அதிகாரி கூறினார்.
இந்த இளைஞரால் 3டி பிரிண்டர் மற்றும் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இந்த துப்பாக்கியை வீட்டிலேயே தயாரிக்க முடிந்தது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த 3டி-அச்சிடப்பட்ட துப்பாக்கி 15 சுற்றுகள் சுடும் திறன் கொண்டது.
இதையும் படிங்க: சுவிஸ் வான்வெளி திடீர் மூடல்.. விமானங்கள் உடனடி தரையிறக்கம்.!
இந்நிலையில், உரிமம் இல்லாமல் துப்பாக்கிகள் அல்லது வெடிமருந்துகளை தயாரித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்தமை உள்ளிட்ட தொடர்ச்சியான துப்பாக்கி குற்றங்களுக்காக அந்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூன் 22-ஆம் தேதி பெர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.
அவுஸ்திரேலியாவில், பொதுமக்கள் முழுமையாக தானியங்கி ஆயுதங்களை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் மற்ற அனைத்து துப்பாக்கி உரிமைகளும் அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டு, செல்லுபடியாகும் உரிமம் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
1996-ஆம் ஆண்டில், தாஸ்மேனியாவில் உள்ள முன்னாள் காலனித்துவ சிறைச்சாலையான போர்ட் ஆர்தரில் ஒரு துப்பாக்கிதாரி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.