டி20 தொடரை வென்ற இலங்கை அணி: 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
82 ஒட்டங்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே
இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ஓட்டங்களை குவித்தார்.
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவறியதால் 14.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டும் சேர்த்தது.
வெற்றி பெற்ற இலங்கை
83 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க 23 பந்துகளில் 39 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 27 பந்துகளில் 33 ஓட்டங்களும் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இலங்கை அணி இறுதியில் 10.5 ஓவர்கள் முடிவிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 88 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |