3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை: ஐசிசி வெளியீடு
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அட்டவணை வெளியிட்ட ஐசிசி
சமீபத்தில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியாவை தோற்கடித்து முதல்முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தது.
இந்நிலையில், கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அந்த அட்டவணையில் 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை டெஸ்ட் தொடரை நிர்ணயித்துள்ளது.
அதில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உட்பட 9 நாட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.
இத்தொடரில் மொத்தம் 68 டெஸ்ட் தொடர் நடைபெறும். அதில், 3 உள்நாட்டு தொடர், 3 வெளிநாட்டு தொடர் என ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.
கடைசியில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டியில் நுழைய தகுதி பெறும்.
இத்தொடருக்கான கடைசி ஆட்டம் 2025-ம் ஆண்டு லண்டன் ண்டன் லார்ட்சில் நடைபெறும். நாளை ஆஸ்திரேலியா அணிக்கும், இங்கிலாந்து அணிக்கம் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் பர்மிங்காமில் நாளை நடைபெறுகிறது. இதிலிருந்து 3-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |