3 இளம் பெண்களை கடத்தி இன்ஸ்டாகிராம் நேரலையில் கொலை செய்த கும்பல்: அர்ஜென்டினாவில் பரபரப்பு
இன்ஸ்டாகிராம் நேரலையில் 3 இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்த போதைப்பொருள் கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது
காணாமல் போன மூன்று இளம் பெண்கள்
அர்ஜென்டினாவில் காணாமல் போனதாக நம்பப்பட்ட பிரெண்டா டெல் காஸ்டிலோ, மொரேனா வெட்டி மற்றும் லாரா கியூட்ரேஸ் என்ற 3 இளம்பெண்களும் மர்ம போதைப்பொருள் கும்பலால் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
காவல்துறை தகவல் படி, பாதிக்கப்பட்ட 3 பெண்களும் கொலையாளிகளின் சதி செயலில் சிக்கி அவர்கள் அழைப்பின் பேரில் சொகுசு வீடு ஒன்றுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பின் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் நேரலை
போதைப்பொருள் கும்பல் பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்ததோடு, சுமார் 45 பேர் கொண்ட இன்ஸ்டாகிராம் குழுவிற்கு நேரலையில் ஒளிப்பரப்பியுள்ளது.
இந்நிலையில் 3 இளம் பெண்களை சித்திரவதை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போதை பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |