ஐரோப்பிய நாடொன்றில் நிலநடுக்கம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இத்தாலி நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி நாட்டில் நிலநடுக்கம்
இத்தாலி நாட்டிலுள்ள Naples நகரத்துக்கு மேற்கே, நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 7.46 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து பாறைகள் பெயர்ந்து விழுந்ததில், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பல சேதமடைந்துள்ளன.
#CampiFlegrei: dalle prime immagini che circolano sembra che gran parte dei danni più importanti siano stati causati dal crollo dei costoni di roccia che bordano gran parte dei crateri della caldera. pic.twitter.com/s8PLrMo1LD
— Il Mondo dei Terremoti (@mondoterremoti) July 31, 2026
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட, மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். சில இடங்களில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இரவு 10.00 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம்
விடயம் என்னவென்றால், பொதுவாக ரிக்டர் அளவுகோலில் 4.0 முதல் 4.9ஆக பதிவாகும் நிலநடுக்கம் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறப்படுவதுண்டு.
Significant damage following a M4.7 earthquake that struck the Campi Flegrei, west of Naples, Campania, southern Italy. pic.twitter.com/6yivOZbb3J
— Weather Monitor (@WeatherMonitors) July 31, 2026
ரிக்டர் அளவுகோலில் 6.0 முதல் 6.9ஆக பதிவாகும் நிலநடுக்கத்தை வலிமையானது என்றும், ரிக்டர் அளவுகோலில் 7.0 முதல் அதற்கு அதிகமான அளவாக பதிவாகும் நிலநடுக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
என்றாலும், எவ்வளவு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதோ, அதற்கேற்ப பாதிப்பும் இருக்கும் என்பதும் உண்மை.
அதாவது, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் உருவாகும் நிலநடுக்கத்தை விட, குறைந்த ஆழத்தில் உருவாகும் நிலநடுக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதனால்தான், இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இம்முறை உருவான நிலநடுக்கம், வெறும் 3 மீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
ஆக, இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், 40 ஆண்டுகளில் இதுதான் வலிமையான நிலநடுக்கம் என்கிறது துறைசார் நிறுவனம்.
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 4 பேர் காயமடைந்துள்ளனர். என்றாலும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
🟠 #CampiFlegrei: purtroppo iniziano ad arrivare anche immagini di edifici chiaramente inagibili. Per fortuna al momento si contano soltanto 4 feriti NON gravi.
— Il Mondo dei Terremoti (@mondoterremoti) July 31, 2026
C'è stato anche un lungo blackout dovuto al crollo di un traliccio dell'alta tensione dell'area di Agnano. pic.twitter.com/lxSUuazKJx
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாறைகள் பெயர்ந்து விழுந்து கார்கள் நசுங்கிக் கிடக்கும் காட்சிகளும், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதையும், அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளுக்கு ஓடும் காட்சிகளும் வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |