பிரான்ஸின் Seine நதியில் கண்டெடுக்கப்பட்ட 4 மனித சடலங்கள்: சந்தேகத்தின் பேரில் ஓருவர் கைது!
பிரான்ஸில் உள்ள நதியிலிருந்து 4 மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Seine நதியில் 4 சடலங்கள்
பாரிஸ் நகருக்கு அருகே உள்ள Seine நதியில் நான்கு மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 13ம் திகதி Seine நதியில் அமைந்துள்ள choisy-le-roi என்ற தென்-கிழக்கு புறநகரில் உள்ள ஆற்றுப்பாலத்தில் முதல் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் விளைவாக மேலும் 3 மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க அப்பகுதியை சேர்ந்த ஆணுடையது என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையின் தடுப்பு சுவருக்கு கருப்பு நிறத்தில் வண்ணம் பூச திட்டம்! காரணம் தெரியுமா?
மற்ற மூன்று சடலங்களும் நீரில் நீண்ட நேரம் இருந்ததோடு, சிதைந்து இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவரின் கழுத்து நெறிக்கப்பட்டும், மற்றவர்களின் உடலில் பலத்த காயங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது
நால்வரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அவரது விவரம் குறித்தும், அவர் மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் எந்தவொரு விவரமும் பொலிஸார் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |