அமெரிக்கா-மெக்சிகோ எல்லையின் தடுப்பு சுவருக்கு கருப்பு நிறத்தில் வண்ணம் பூச திட்டம்! காரணம் தெரியுமா?
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவருக்கு கருப்பு நிறத்தில் வண்ணம் பூச திட்டமிடப்பட்டுள்ளது.
டிரம்பின் சட்டவிரோத குடியேற்ற தடுப்பு கொள்கை
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டினரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கோடை காலத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்காக கூடுதலாக 46 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செயலாளர் நோமின் வழங்கிய தகவலில், தினமும் அரை மைல் தூரத்திற்கு இந்த தடுப்பு சுவரானது கட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த தடுப்பு சுவர்களின் காரணமாக அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சமீபத்திய மாதங்களில் எல்லை தாண்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
கருப்பு நிறத்தில் தடுப்பு சுவர்கள்
இந்நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவருக்கு கருப்பு நிறத்தில் வண்ணம் பூச திட்டமிட்டுள்ளது.
கருப்பு நிறத்தில் வர்ணம் பூசுவதன் மூலம் சுவர்களில் அதிகரிக்கும் வெப்பம், எல்லை தாண்ட முயற்சித்து சுவர்களில் எறும் நபர்களுக்கு நிலைமையை சிக்கலாக்கும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் க்ரிஸ்டி நோம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையின் பாதுகாப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |