இன்னும் 24 மணிநேரத்திற்குள் போர் நிறுத்தம்: இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்படும் 300 பாலஸ்தீனிய கைதிகள்
காசாவில் 4 நாட்களுக்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் விடுவிக்க உள்ள கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம்
இஸ்ரேலிய ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7ம் திகதி முதல் போர் தாக்குதலானது நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை 1400 இஸ்ரேலியர்களும், காசாவில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 11,500 பேரும் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பல்வேறு உலக நாடுகளின் வற்புறுத்தலை தொடர்ந்து காசாவில் 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கு மாற்றாக ஹமாஸ் படையினர் 50 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், சிறையில் சிறையில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
பிணைக் கைதிகள் விடுவிப்பு
இந்நிலையில் காசாவில் 4 நாள் போர் நிறுத்தம் இன்னும் 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் கத்தார் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஹமாஸ் படையினருடன் பரிமாறிக் கொள்ளப்பட உள்ள 300 பாலஸ்தீனர்களின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
அதில் 278 பேர் 18 வயதுடையவர்கள் அல்லது அதனினும் குறைந்த வயது கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 பேர் வயது வந்த பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |