அமெரிக்காவில் வாகன விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டு பெண்! 4 இந்தியர்களுக்கு நேர்ந்த பயங்கரம்
அமெரிக்காவில் நடந்த வாகன விபத்தில் தமிழ்நாடு பெண் உட்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.
வாகன விபத்து
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ்(Dallas) அருகே உள்ள Anna White Street-யை கடந்த U.S. 75-யில் ஐந்து வாகனங்களை உள்ளடக்கிய வாகன விபத்து அரங்கேறியது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாகவும், பலர் காயமடைந்து இருப்பதாக Collin County Sheriff's அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
பலியான 4 பேர்களில் ஹைதராபாத்தை சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஓரம்பட்டி (Aryan Raghunath Orampatti), தெலுங்கு மாணவர்களான ஃபரூக் ஷேக்(Farooq Sheikh) மற்றும் லோகேஷ் பலச்சார்லா(Lokesh Palacharla) மற்றும் தமிழகத்தை சேர்ந்த தர்ஷினி வாசுதேவ்(Darshini Vasudev) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி D.C. Manjunath உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தி இருப்பதோடு, இந்திய தூதரகம், குடும்பங்கள் மற்றும் அவர்களின் சமூகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கான முழு ஆதரவையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விபத்து நேர்ந்தது எப்படி?
ஆதாரங்களின் அடிப்படையில், நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்கலடைந்து நின்ற போது பலியானவர்களின் SUV ரக காரும் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், அப்போது வேகமாக வந்த லொறி ஒன்று வேகத்தை குறைக்க முடியாமல் வாகனங்களுடன் நேரடியாக மோதியது.
இந்த மோதலின் காரணமாக SUV காரில் தீ பற்றியது, துரதிஷ்டவசமாக காரில் சிக்கியவர்களால் வெளியேறிய முடியாமல் போனதுடன் தீயில் உடல் கருகி பலியாகினர்.
இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |