ரஷ்யாவில் 4 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: இந்திய தூதரகம் நடவடிக்கை
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே உள்ள ஒரு ஆற்றில் நான்கு இந்திய மருத்துவ மாணவர்கள் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
இறந்த மாணவர்களில் இருவர் பெண்கள், அனைவருக்கும் 18 முதல் 20 வயது வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
வெலிகி நோவ்கோரோட் (Veliky Novgorod) நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தனர்.
முதலில், வோல்கோவ் ஆற்றில் ஒரு மாணவி சிக்கியதாக கூறப்படுகிறது.அவரை காப்பாற்ற முயன்ற நான்கு பேரும் ஆற்றில் இறங்கினர்.
அதில் ஒருவரை மீட்க முடிந்த நிலையில் மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்திய அரசு உதவி
உயிரிழந்த மாணவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க இந்திய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
2/2 Proper medical, incl. psychological treatment is being provided to the girl student who was saved. These students were pursuing medical education in Veliky Novgorod State University. Sincere condolences to the bereaved families 🙏
— India in St. Petersburg (@indianconsspb) June 7, 2024
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |