இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் நால்வர் கைது: பின்னணி
இங்கிலாந்தில் மூன்று பேரைத் தாக்கி படுகாயமடையச் செய்த இந்திய வம்சாவளியினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்திய வம்சாவளியினர் நால்வர் கைது
வெள்ளிக்கிழமை அதிகாலை 6.15 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Bilston என்னுமிடத்தில், இளைஞர்கள் சிலருக்குள் மோதல் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, அங்கு மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு, உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு நின்ற ஒரு காரும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. காரில் இரத்தம் தெறித்திருந்ததும் தெரியவந்துள்ளது.
தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய பொலிசார், ஹர்தீப் சிங் (28), முகேஷ் குமார் (30), மற்றொரு ஹர்தீப் சிங் (25) மற்றும் லக்விந்தர் சிங் (26) ஆகிய நான்கு பேரைக் கைது செய்துள்ளார்கள்.
இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள். அவர்கள் எதற்காக தாக்குதல் நடத்தினார்கள், தாக்கப்பட்டவர்கள் யார் என்னும் விவரங்கள் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |