இந்திய வணிக கப்பல் மீது பாய்ந்த 3 ஏவுகணைகள்: ஒடேசாவில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு
உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்
உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜூலை 19ம் திகதி நடந்த இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்தியர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய ஏவுகணை நடத்திய இந்த தாக்குதலினால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இந்தியர்கள் மற்றும் சிரியர்கள் என மொத்தம் 17 பேர் வரை பணியாற்றியுள்ளனர்.
தாக்குதலுக்கு பிறகு இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.
இதில், 9 மாலுமிகள் மற்றும் 1 கடல் வழி காட்டி என 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய கப்பலின் விவரம்
ரஷ்ய தாக்குதலில் பாதிக்கப்பட்ட கப்பல், மும்பை சேர்ந்த “ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் நிறுவனத்தின் M V கோல்டன் லியோ ஆகும்.

ஒடேசா தறைமுகத்தில் இருந்து மக்காச்சோளம் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட M V கோல்டன் லியோ கப்பல் மீது 3 ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
மேலும் இந்த கப்பல் கினியா - பிசாவ் கொடியுடன் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |