ஈரான் மீது பாய்ந்த இஸ்ரேலிய ராக்கெட்டுகள்: கொல்லப்பட்ட ஈரானிய வீரர்கள் எண்ணிக்கை
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 ஈரானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மீது அக்டோபர் 1ம் திகதி ஈரான் 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதற்கு இஸ்ரேல் எப்போது பதிலடி வழங்கும் என உலக நாடுகள் உற்று நோக்கி வந்த நிலையில், நேற்றிரவு ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.
Israel strikes targets linked to missile production in Iran.
— NEXTA (@nexta_tv) October 26, 2024
Over 100 planes were involved in the attack on Iran on Saturday, including the cutting-edge F-35.
About 20 targets were hit, including damage to Iran's air defense system and missile production facilities. pic.twitter.com/4rBSZKZWcN
இதையடுத்து ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் வெடிப்பு சத்தம் கேட்டதாக ஊடகங்களில் வீடியோ காட்சிகள் வெளியாகின.
அதே நேரத்தில் ஈரான் தன்னுடைய ஒட்டுமொத்த வான் பரப்பையும் உடனடியாக மூடுவதாக அறிவித்தது.
4 ஈரானிய வீரர்கள் பலி
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இதுவரை 4 ஈரானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் இந்த உயிரிழப்புகளில் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிக்கையின் அடிப்படையில் காயமடைந்தவர்களின் நிலைமையும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலிய படைகள் தங்கள் தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |