ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான ஆம்புலன்ஸ் விபத்தில் 4 பேர் பலி!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் விமான ஆம்புலன்ஸ் விபத்துக்கு உள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர்.
இது குறித்து அபுதாபி காவல்துறை பதிவிட்ட ட்வீட்டில், சனிக்கிழமை நடந்த விமான ஆம்புலன்ஸ் விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் விமானி பயிற்சியாளர் காமிஸ் சயீத் அல்-ஹோலி (Khamis Saeed Al-Holy), லெப்டினன்ட் பைலட் நாசர் முஹம்மது அல்-ரஷீதி (Nasser Muhammad Al-Rashidi) மற்றும் மருத்துவரான ஷாஹித் ஃபாரூக் கோலம் (Dr Shahid Farouk Gholam) மற்றும் செவிலியர் ஜோயல் கியுய் சகாரா மிண்டோ (Joel Qiui Sakara Minto) ஆகியோர் விபத்தில் இறந்ததாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
(Representational image)
அபுதாபி காவல்துறையின் பொது தலைமையகம் அதன் மருத்துவ குழு உறுப்பினர்கள் நான்கு பேரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது.
இரண்டு விமானிகள் அமீரகத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆனால், மருத்துவர் குலாம் மற்றும் செவிலியர் மிண்டோவின் தேசியங்கள் உடனடியாக அறியப்படவில்லை என Gulf News-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.