திருமண நிகழ்வில் சுவர் இடிந்ததால் நேர்ந்த சோகம்.., 4 பேர் பரிதாபமாக மரணம்
திருமண ஊர்வலத்தில் எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவர் விழுந்து விபத்து
இந்திய மாநிலமான உத்தரப்பிரேதசத்தில் மவு மாவட்டம் கோஷி பகுதியில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருமண ஊர்வலத்தில் குழந்தைகள் உள்பட ஏராளமான பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேளதாளங்களுடன் குறுகிய தெரு ஒன்றில் திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, பள்ளியின் சுற்றுச்சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில், ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.
4 பேர் மரணம்
அந்த நேரத்தில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பதறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 16 -க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |