நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் நான்காவது கசிவு: ஸ்வீடன் கடலோர காவல்படை அறிவிப்பு
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் நான்காவது கசிவு கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு கணிக்கக்கூடியது மற்றும் முட்டாள்தனமானது என அறிவிப்பு.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் நான்காவது கசிவு பகுதி ஒன்று கண்டறியப்பட்டு இருப்பதாக ஸ்வீடன் கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் டென்மார்க்கிற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் திங்கட்கிழமை கசிய தொடங்கியதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் மிகப் பெரிய வெடிப்பும் பதிவு செய்யப்பட்டது.
AP
இந்த முதல் கசிவை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ஸ்வீடன் கடலோர காவல்படை நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைனில் மேலும் கூடுதலான இரண்டு கசிவினை கண்டறிந்தனர்.
நோர்ட் ஸ்ட்ரீம் பைப்லைனில் ஏற்பட்ட இந்த கசிவு திட்டமிட்ட தாக்குதல் என்றும், வெடிமருந்துகள் மூலம் வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு கசிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ரஷ்யாவை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது.
AP
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் குற்றச்சாட்டை போன்றே ஐரோப்பிய யூனியனும் எரிவாயு கசிவினை திட்டமிட்ட தாக்குதல் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ரஷ்யா, எரிவாயு கசிவு தொடர்பாக ரஷ்யாவை குற்றம் சாட்டுவது கணிக்கக்கூடியது மற்றும் முட்டாள்தனமானது என அறிவித்தது.
SKY
கூடுதல் செய்திகளுக்கு: ராணி எலிசபெத்திற்கான அரச துக்கம் நிறைவு: உடனடியாக மேகன் மார்க்கல் வெளியிட்ட அறிவிப்பு
இந்நிலையில் ஸ்வீடன் கடலோர காவல்படை செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த கருத்தில், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் நான்காவது கசிவு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.