ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டு கொலை! மாநிலத்தையே உலுக்கிய கோரச் சம்பவம்
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ரோத்தக் நகரில் வசித்து வருபவர் பிரதீப் மாலிக். இவரின் மனைவி சந்தோஷ் பப்ளி. மாலிக் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இந்த தம்பதிக்கு நேகா என்ற மகளும் அபிஷேக் என்ற 20 வயது மகனும் உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாலிக், அவரது மனைவி, மாலிக்கின் மாமியார், மகள் உள்ளிட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக மிதந்து கிடந்துள்ளனர். இதையடுத்து காவல் அதிகாரிகள் 4 பேரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் மாலிக்கின் மகன் அபிஷேக்கிடம் பொலிஸ் நடத்திய விசாரணை மூலம் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தனர்.
அதாவது, அபிஷேக்கின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரது தந்தை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அபிஷேக்கும், குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த அபிஷேக் மாலிக்
மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்யத் திட்டமிட்டு 4 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதையடுத்து பொலிசார் அபிஷேக்கை கைது செய்துள்ளனர்.