ஸ்பெயின் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 புலம்பெயர்ந்தவர்கள் உடல்: இதுவரை 13,000 பேர் என உள்துறை தகவல்
ஐரோப்பாவிற்குள் குடியேற முயன்று படகுகளில் வந்த 4 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் ஸ்பெயின் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
கரை ஒதுங்கிய உடல்கள்
மொரோக்கோ நாட்டில் இருந்து ஐரோப்பாவிற்கு ஸ்பெயின் வழியாக நுழைய முயன்ற 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின் நாட்டின் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது எனது அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 32 அகதிகள் மொரோக்கோ நாட்டில் படகில் புலம்பெயர முயன்றுள்ளனர். இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என்றும், அவர்களின் சடலங்களே கடற்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாகவும் ஸ்பெயின் பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
Fethi Belaid/AFP/Getty Images
ஐரோப்பாவிற்கு நுழைய மொரோக்கோ மற்றும் அல்ஜீரியா நாட்டு மக்கள் ஸ்பெயினை நுழைவு புள்ளியாக வைத்து மத்திய தரைக்கடல் வழியாக பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயக்க நிலையில் 4 பேர்
மேலும் இந்த கடல் வழி பயணத்தில் தப்பித்த புலம்பெயர்ந்தவர்களின் 4 பேர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, இந்த விவகாரம் குறித்து ஸ்பெயின் பொலிஸார் விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
AP
ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 15ம் திகதிக்குள் கிட்டத்தட்ட 13,000 புலம்பெயர்ந்தவர்கள் ஸ்பெயின் மற்றும் பலேரிக் தீவுக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்: 3 பலி, 6 பேர் படுகாயம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |