முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த இயற்கையான 4 ஹேர் மாஸ்க்: வீட்டிலேயே செய்யலாம்
இன்றைய நாட்களில் முடி உதிர்வு என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.
முடி உதிர்வைக் குறைக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்.
இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும் பொதுவான இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுபவை.
தேன் ஹேர் மாஸ்க்
தேன் ஹேர் மாஸ்க் தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் தேனுடன் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து பிறகு இந்த பேஸ்ட்டை தலையில் நன்றாக தடவி கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடியில் தடவலாம். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
வெங்காயம் ஹேர் மாஸ்க்
வெங்காயத்தின் ஆயுர்வேத பண்புகள் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த ஹேர் மாஸ்க் தயாரிக்க வெங்காய சாறு எடுத்து இதனை முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
இதனை முடி முழுவதும் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் வைத்திருந்து பின்னர் கூந்தலை கழுவவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 2 - 3 முறை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
முட்டை ஹேர் மாஸ்க்
முட்டை ஹேர் மாஸ்க் முடிக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்க உதவுகிறது.
இந்த ஹேர் மாஸ்க்கை தயாரிக்க, முதலில் ஒரு முட்டையை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இந்தக் கலவையை முடி முழுவதும் தடவி அரை மணி நேரம் அப்படியே ஊற ஊறவைத்து பின் கழுவி நன்றாக சுத்தம் செய்யவும்.
வெந்தயம் ஹேர் மாஸ்க்
வெந்தய விதையின் ஹேர் மாஸ்க் முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது.
இந்த ஹேர் மாஸ்க் தயாரிக்க, வெந்தய விதையை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அரைத்து பேஸ்ட் செய்துக் கொள்ளவும்.
வெந்தய விதைகளின் இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் அரை மணி நேரம் வைத்திருந்து பின்னர் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |