நரைமுடியை கருப்பாக மாற்றும் இயற்கை ஹேர் டை.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நரைமுடியை நிரந்தரமாக கருமையாக மாற்ற இந்த ஒரே ஒரு ஹேர் டை போதும். இதனை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நீலி பிருங்காடி எண்ணெய்- 30ml
- திரிபலா சூரணம் – 20g
செய்முறை
இந்த இரண்டு பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இதை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலந்து, குறைவான தீயில் நன்றாக சூடாக்க வேண்டும்.
கொதிக்க கொதிக்க நல்ல கருமை நிறமாக மாறும். அதன் பின் இதனை நன்கு ஆறவைத்து பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
இந்த எண்ணெயை இரண்டு ஸ்பூன் எடுத்து, இதனுடன் நீலிபிரிங்காடி எண்ணெயை சிறிதளவு கலந்துகொள்ள வேண்டும்.
ஹேர்டை பிரஷ் பயன்படுத்தி தலையில் வெள்ளை முடி அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் தடவவேண்டும். முடியின் வேர்க்கால்களில் படும் அளவுக்கு தடவவேண்டும்.
நீலி பிருங்காடி தலைமுடியின் வேர்கால்களை குளிர்ச்சியாக்கி, ஊட்டத்தை கொடுக்கும். முடியை கருமை நிறமாக மாற்றும்.
இதை தலைக்கு ஹேர் டையாக தடவி 2 மணி நேரம் நன்றாக ஊறவிட்டு அலசினால் கூந்தல் கருகருவென வளரும்.
இதை வாரத்தில் இரண்டு முறை என தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால், முடி பழுப்பு நிறமாகி பின் கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |