நடுவானில் மோதிக்கொண்ட ராணுவ விமானங்கள்; 4 விமானிகள் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் விமான படைக்கு சொந்தமான 2 பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் 4 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் ராணுவ விமானங்கள் மோதி விபத்து
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்கே உள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் படங்காஸ் மாகாணத்தில் உள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில், பிலிப்பைன்ஸ் விமான படைக்கு(PAF) சொந்தமான 2 SF-260 விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 3:51 மணியளவில் லிபா நகரில், அந்த விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு, விமானப்படை வளாகத்திற்குள்ளே விழுந்து நொறுங்கியது.
Philippine Air Force planes FLY DANGEROUSLY CLOSE before COLLIDING MID-AIR — BOTH SPIRAL OUT OF CONTROL & CRASH during TRAINING 4 AIR FORCE PILOTS KILLED https://t.co/fgqEdxJNM3
— RT (@RT_com) October 24, 2026
இந்த விபத்தில், அந்த விமானத்திலிருந்த 4 விமானிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் விமானப்படை தனது அனைத்து SF-260 ரக விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உயிரிழந்த விமானிகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் விமான படை, "நமது வீரமரணம் அடைந்த விமானிகளின் சேவையையும் தியாகத்தையும் பிலிப்பைன்ஸ் விமானப்படை போற்றுகிறது.
READ | The Philippine Air Force (PAF) mourns the loss of four pilots in an aviation accident involving two SF-260 aircraft during a training flight at Fernando Air Base on October 23, 2026, at 3:51 PM. Read more: https://t.co/C39gmTooLg https://t.co/g91Xn2br8Q
— Philippine Air Force (@PhilAirForce) October 24, 2026
மேலும், அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு பொதுமக்களிடம் பணிவுடன் வேண்டுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
SF-260 என்பது பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தும் ஒரு இலகுரக விமானம் ஆகும்.
கடந்த மே 20 அன்று, வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள பெங்குயட் என்ற மலைப்பாங்கான மாகாணத்தில் ஒரு SF-260 விமானம் விபத்துக்குள்ளானதில், 2 விமானிகள் உயிரிழந்தனர் .