இங்கிலாந்தில் வீடொன்றில் வெடிபொருட்கள் இருக்கலாம் என தகவல்: பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்
இங்கிலாந்தில், வீடொன்றில் வெடிபொருட்கள் இருக்கலாம் என தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிப்பு
நேற்று, புதன்கிழமை மாலை 4.00 மணியளவில், இங்கிலாந்தின் கென்ட் பகுதியிலுள்ள Margate நகரில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிபொருட்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அங்கு பொலிசாரும் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சார்ந்த வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பில், அந்த வீட்டிலிருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார்.
அப்பகுதியிலுள்ள நான்கு தெருக்களில் அமைந்துள்ள வீடுகளிலுள்ள மக்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை வரையும் பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |