இந்திய இளம்பெண் கொலை வழக்கு: நான்கு பிரித்தானிய பொலிசார் மீது ஒழுங்குமுறை விசாரணை
பிரித்தானியாவில் இந்திய இளம்பெண்ணொருவரின் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பொலிசார் மீது ஒழுங்குமுறை விசாரணை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய இளம்பெண் கொலை வழக்கு

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருமணமாகி தன் கணவருடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்தார் ஹர்ஷிதா ப்ரெல்லா (24).
ஹர்ஷிதாவும் அவரது கணவரான பங்கஜ் லம்பாவும் (23) இங்கிலாந்தின் Northamptonshireஇலுள்ள Corby என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.

இந்நிலையில். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஹர்ஷிதா.+
ஹர்ஷிதாவை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது கணவரான பங்கஜ் தலைமறைவாகிவிட்டார். இன்னமும் அவர் சிக்கவில்லை. சர்வதேச அளவில் அவர் ஹர்ஷிதா கொலை தொடர்பில் தேடப்பட்டுவருகிறார்.

பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை
இந்நிலையில், தன்னை தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக ஏற்கனவே ஹர்ஷிதா பொலிசில் புகாரளித்திருந்தும் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அப்போதே அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், ஒருவேளை ஹர்ஷிதா கொல்லப்பட்டிருக்கமாட்டார்.
ஆகவே, பொலிசார் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அமைப்பான Independent Office for Police Conduct (IOPC) அமைப்பு, தன் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹர்ஷிதா புகாரளித்தும், பொலிசார் அவரை தொடர்புகொள்வதிலும், விசாரணை மேற்கொள்வதிலும் தவறினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தது.
இந்நிலையில், Northamptonshire பொலிசார் நான்குபேர், ஹர்ஷிதா வழக்கில் சரியாக நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கலாம் என IOPC முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் மீது ஒழுங்குமுறை விசாரணை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |