ஆற்றங்கரையில் மகளை விட்டுவிட்டு குளிக்க சென்ற தந்தை..பின்னர் நேர்ந்த விபரீதம்
தமிழக மாவட்டம் திருவாரூரில் 4 வயது சிறுமி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆற்றில் மூழ்கிய சிறுமி
திருவாரூரின் நீடாமங்கலம் அருகேயுள்ள பொதக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுலைமான். இவர் கோரை ஆற்றில் குளிக்க செல்லும்போது, தனது 4 வயது மகள் சுகைராவை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
சுகைராவை கரையிலேயே அமரவைத்துவிட்டு சுலைமான் மட்டும் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதை கவனித்த சுலைமான், தனது மகளை திரும்பிப் பார்த்தபோது அவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்து சுகைராவை தேடியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
அணையை உடைத்து சிறுமியின் உடல் மீட்பு
பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இறங்கி தீயணைப்பு வீரர்கள் சிறுமியை தேடியுள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், அணையை உடைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு வயது சிறுமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |