ரதயாத்திரையின்போது மின்சாரம் பாய்ந்து 6 பேர் மரணம்! மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
இந்திய மாநிலம் திரிபுராவில் மத ரதயாத்திரையின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர் மீது பாய்ந்த மின்சாரம்
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் உனகொடி மாவட்டத்தில் உள்ள ஜகன்நாத் கோவிலில் இன்று திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கடவுள் சிலையின் தேரோட்டம் நடைபெற்றது.
எதிர்பாராத விதமாக இரும்பு சட்டத்தினால் ஆன தேர் மீது மின் கம்பி உரசியது. இதனால் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
IANS
அப்போது தேர் மீது அமர்ந்திருந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
PTI
இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. ரத்தயாத்திரையின்போது மின்சாரம் தாக்கி 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |