பிரித்தானியாவில் பயங்கர வெடிவிபத்து: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவின் தெற்கு லண்டலில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெற்கு லண்டனின் குரோய்டன் (Croydon)பகுதியில் உள்ள குடியிருப்பில் திங்கள்கிழமை 07:00 மணியளவில் பலத்த வெடிப்புடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து 4 பேர் வரை மீட்கப்பட்ட நிலையில், நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பிரித்தானியாவின் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ள தகவலில், ஆகஸ்ட் 8ம் திகதி திங்கள்கிழமை 07:00 மணியளவில் தோர்ன்டன் ஹீத்தின் கல்பின்ஸ் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வழங்கப்பட்டது.
Four people have been rescued as a house collapsed after a fire and explosion in Croydon, south London. The cause of the incident is still not known.
— Sky News (@SkyNews) August 8, 2022
Read more here: https://t.co/uHwnWix4uK pic.twitter.com/yEctr2FChL
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களும் சுமார் 40 தீயணைப்பு வீரர்களும் அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 4 பேர் வரை மீட்கப்பட்ட நிலையில், நான்கு வயது சிறுமி என நம்பப்படும் குழந்தையின் சடலம் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்டது. இந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளால் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த தீ மற்றும் வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் அதுகுறித்த விசாரணையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் ஜஸ்பிரித் பும்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தநிலையில் குரோய்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ரீட் ட்வீட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், "இன்று காலை கல்பின்ஸ் சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு குழந்தை இறந்ததை தீயணைப்புப் படையினர் உறுதிசெய்துள்ளது இதயத்தை நொறுக்கிவிட்டது, சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்காகவும் பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
sky news