ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் ஜஸ்பிரித் பும்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முதன்மை மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா சமீபத்திய காலங்களில் இந்திய அணியால் தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.
ஆட்டத்தின் இக்கட்டான சூழ்நிலையில் அல்லது விக்கெட்கள் தேவைப்படும் போது ஜஸ்பிரித் பும்ரா தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி பல்வேறு ஆட்டங்களில் இந்திய அணியை வெற்றி பெற செய்துள்ளார்.
Getty Images
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ள தகவல், ஜஸ்பிரித் பும்ரா சில காலமாகவே முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையிலேயே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
ஜஸ்பிரித் பும்ராவின் முதுகு காயம் முன்னேற்றம் அடையாததால் ஆகஸ்ட் 27ம் திகதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகுகிறார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவை போலவே ஹர்ஷல் படேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய்...தூக்கத்திலேயே விமானத்தில் உயிரிழந்த பரிதாபம்!
மேலும் தற்போது இருவரும் பெங்களூரில் உள்ள என்சிஏவில் சிகிச்சை பெற்று வருவதாக பிசிசிஐ திங்கள்கிழமை வழங்கிய ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.