குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய்...தூக்கத்திலேயே விமானத்தில் உயிரிழந்த பரிதாபம்!
ஹாங்காங்கில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய் விமானத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் 15 ஆண்டுகள் ஹாங்காங்கில் வாழ்ந்துவிட்டு சொந்த நாடான பிரித்தானியாவிற்கு தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நாடு திரும்பிய பெண் மருத்துவர் ஹெலன் ரோட்ஸ், விமானத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் போதே உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து பிரித்தானியாவிற்கு பறந்து கொண்டு இருந்த விமானத்தில் பயணித்த ஹெலன் சில மணி நேரங்களுக்கு பிறகு எத்தகைய பதிலும் அளிக்காமல் அமைதியாக காணப்பட்டுள்ளார்.
GoFundMe
இதனைத் தொடர்ந்து ஹெலன் தூக்கத்தில் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால் ஹெலன் தூக்கத்தில் உயிரிழந்த பிறகு மீதமுள்ள எட்டு மணி நேர விமானப் பயணத்தில், ஹெலனின் குழந்தைகள் அவரது இறந்த அம்மாவின் உடலின் அருகில் அமர்ந்து வந்துள்ளனர்.
விமானத்தில் இருந்து ஹெலனின் உடல் ஜெர்மன் நகரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் தங்களது பிரித்தானிய பயணத்தை அதே விமானத்தில் தொடர்ந்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: வர்த்தக ட்ரோன்களை ஆயுதங்களாக பயன்படுத்தும் உக்ரைன் வீரர்கள்: வீடியோ ஆதாரம்
REUTERS
இந்தநிலையில் துக்கத்தில் இருக்கும் குடும்பத்திற்கு உதவுவதற்காக ஜெய்ன் ஜெஜே என்ற நபர் நிதி திரட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.