வர்த்தக ட்ரோன்களை ஆயுதங்களாக பயன்படுத்தும் உக்ரைன் வீரர்கள்: வீடியோ ஆதாரம்
ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதலில் உக்ரைனிய ராணுவ படைகள் வணிக ரீதியான ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய ரஷ்ய படையெடுப்பு ஐந்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த போர் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான உக்ரைனிய பொதுமக்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக ஆயுதங்கள் தாங்கி எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
#Ukraine: A Ukrainian soldier demonstrating a modified commercial off-the-shelf DJI Mavic 3 drone adapted to drop two air delivered improvised munitions - here based on American M430A1 HEDP 40x53mm grenades.
— ?? Ukraine Weapons Tracker (@UAWeapons) July 27, 2022
Various modified COTS drones are widely used by Ukrainian forces. pic.twitter.com/R3Nae86h9k
அதுமட்டுமின்றி சில உக்ரைனிய பொதுமக்கள் தங்களது வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் தங்கள் வீடுகளை பாதுகாத்தல் மற்றும் ரஷ்ய துருப்புக்களை கண்காணிக்க உதவுவதற்காக தங்கள் சொந்த ட்ரோன்களை நன்கொடையாக வழங்குதல் ஆகியவற்றின் மூலம் போர் நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட வணிக ரீதியான ட்ரோன்களை ரஷ்ய படைகள் பயனுள்ள போர் கருவியாக மாற்றியுள்ளனர்.
அளவில் சிறிய மற்றும் எடை மிக குறைவான இந்த DJI Mavic 3 ட்ரோன்கள் வெடிமருந்து வீசுவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருப்பதை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் காட்டுக்கின்றன.
Cool video of an #APU soldier flying a consumer grade drone for recon while wearing FPV goggles. #OSINT #Ukraine#Ukrainianwar pic.twitter.com/La7jyYlm5F
— OSINT (Uri) (@UKikaski) June 12, 2022
கூடுதல் செய்திகளுக்கு: சீனாவுடனான வர்த்தகப் போரினால் ஜேர்மனி சந்திக்கப்போகும் பிரச்சனை! வெளியான தகவல்
இவற்றின் மூலம் ரஷ்ய படைகளின் நகர்வினை கண்காணிக்கவும், எதிரிகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தவும் மிகவும் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.