வீட்டுப்பாடம் செய்யாத 4 வயது மாணவனை மரத்தில் தொங்க விட்ட ஆசிரியைகள்
சட்டீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
மாணவனை மரத்தில் தொங்க விட்ட ஆசிரியை
இந்த பள்ளியில், LKG பயிலும் 4 வயது மாணவன் வீட்டுப்பாடம் முடிக்காமல் பள்ளிக்கு வந்துள்ளார்.
அந்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளான காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன், மாணவரை மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளனர்.

4 வயது மாணவரின் சட்டையில் கயிற்றை கட்டி அவரை மரத்தில் தொங்க விட்ட கொடுஞ்செயலை இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ கல்வித்துறையின் கவனத்துக்கு சென்றுள்ள நிலையில், உடனடியாக அதிகாரி ஒருவர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
ஆசிரியரின் நடவடிக்கை தவறு என ஒப்புக்கொண்ட அவர், மாவட்ட கல்வி அதிகாரி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
4 வயது மாணவர் நல்ல உடல்நிலையில் இருந்தாலும், இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |