அம்மா இறந்துவிட்டார் என்று கூறிய குழந்தை: உறவினர்கள் கண்ட திடுக் காட்சி
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், தன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்ற 4 வயது சிறுவன் ஒருவன், அம்மா இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறான்.
அவனைப் பின்தொடர்ந்த அவனது உறவினர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது!
அம்மா இறந்துவிட்டார் என்று கூறிய குழந்தை
நேற்று மதியம், மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள Badlapur என்னுமிடத்தில், கார் பார்க்கிங் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து இறங்கிய 4 வயதுச் சிறுவன் ஒருவன், அருகிலிருந்த தனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்று, அம்மா இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறான்.

அவனைப் பின்தொடர்ந்து அந்தக் கார் இருந்த இடத்தை அடைந்த அவனது உறவினர்கள், காருக்குள் அவனது தாயான மணிஷா போஸ்லேவும், காரின் சாரதியும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், அந்தக் காரின் சாரதியின் பெயர் கணேஷ் ஷிண்டே என தெரியவந்துள்ளது.
குழந்தை சொன்ன தகவலின் அடிப்படையில், கணேஷ் மணிஷாவைக் கொலை செய்துவிட்டு, தன்னைத்தான் குத்திக்கொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
இதற்கிடையில், கணேஷை இதற்கு முன் தங்களுக்கு அறிமுகமில்லை என மணிஷாவின் உறவினர்கள் கூற, அவருக்கும் மணிஷாவுக்கு என்ன தொடர்பு என்பதை அறிவதற்காக கணேஷின் உறவினர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உயிரிழந்த இருவரின் மொபைல் அழைப்புகள் முதலானவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |