80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 40 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் 80 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
40 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி - ஸோப் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று குவேட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி இன்று காலை சென்றுக்கொண்டிருந்தது.

அந்த பேருந்தில், பழுதடைந்த மற்றொரு பேருந்தின் பயணிகள் உட்பட 48 பயணிகள் இருந்தனர்.
பேருந்து டானா சாரில் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து, 80 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில், பேருந்தில் பயணித்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |