வங்காளதேசத்தில் இருந்து திரும்பிய 400 இந்தியர்கள்
இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் வங்காளதேசத்தில் இருந்து 400 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
வங்காளதேசத்தில் வெடித்த போராட்டத்தினால் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
எனினும் அங்கு பதற்றம் நீடிப்பதால் இந்தியர்களை மீட்டு வர வேண்டும் என்ற நெருக்கடி உருவானது.
நேற்றைய தினம் டெல்லியில் இருந்து டாக்காவிற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. எனினும் Air India நிறுவனம் மாலை விமானத்தை இயக்கியது.
இந்த நிலையில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து டாக்காவிற்கு மீண்டும் விமான சேவைகளை தொடங்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |