புனித பயணம் சென்ற 42 இந்தியர்கள் உயிரிழப்பு? சவுதி அரேபியாவில் நேர்ந்த சோகம்
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
42 இந்தியர்கள் உயிரிழப்பு?
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதீனாவிற்கு உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்வர்கள்.

அதன்படி, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 42 பேர் கொண்டு குழு ஒன்று உம்ரா புனித பயணம் மேற்கொண்டுள்ளது.
நேற்று மதீனா சென்று விட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் மெக்கா செல்லும் போது, இந்திய நேரப்படி நள்ளிரவில் 1;30 மணிக்கு எதிரே வந்த டீசல் லாரி மீது மோதியுள்ளது. இதில் பேருந்து தீ பற்றியுள்ளது.

பேருந்தில் பயணித்த 11 ஆண்கள், 20 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேர் உயிரிழந்துள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்த விபத்து தொடர்பாக, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |