வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம்
அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வேலையின்போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 வயது பெண்
அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் எல்லெனி ஜமால் (42). இவர் Creative Director-ஆக பணியாற்றி வந்தார்.
Camilla, Rockmans போன்ற ஃபேஷன் பிராண்டுகளின் விளம்பர பிரச்சாரங்களில் பணியாற்றிய எல்லெனி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு திடீரென அவருக்கு தலைவலி ஏற்பட சரிந்து விழுந்துள்ளார். தன்னை அழைத்து செல்லுமாறு முன்னதாக கணவரை அவர் அழைத்திருந்தார். அலுவலகத்திற்கு வந்த அவர் தனது மனைவிக்கு முதலுதவி அளித்தார்.
மூளைச்சாவு
பின்னர் எல்லெனி ஜமால் சிட்னி மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எல்லெனி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து தனது கணவரின் இஸ்லாமிய நம்பிக்கையின்படி, லக்கேம்பா மசூதியில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை ரூக்வுட் கல்லறையில் எல்லெனி ஜமால் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |