420 பேரை கொன்று குவித்த ரஷ்யா! ஊடுருவிய உக்ரைன் வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரஷ்யாவிற்குள் ஊடுருவிய உக்ரைனிய வீரர்களில் 420 பேர் கொன்று இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
முன்னேறிய உக்ரைனிய படைகள்
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி ஊடுருவல் குறித்து செவ்வாய்க்கிழமை உக்ரைன் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது.
அதில் உக்ரைனிய படைகள் 74 குடியிருப்பு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருப்பதாகவும், குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் 1-3 கிலோ மீட்டர் வரை முன்னேறி இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
420 உக்ரைனிய வீரர்கள் உயிரிழப்பு
இந்நிலையில், ரஷ்யாவுக்குள் ஊடுருவி வரும் உக்ரைனிய வீரர்களுக்கு எதிராக தீவிரமான எதிர்ப்பு தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதாகவும், குர்ஸ்க் பகுதியில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 420 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அத்துடன் குர்ஸ்க் பகுதி மேலே உக்ரைன் ஏவிய 4 ஏவுகணைகளையும் ரஷ்யா அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனிய படைகளின் இந்த திடீர் முன்னேற்றத்தை தொடர்ந்து எல்லை பிராந்தியமான பெல்கோரோட் (Belgorod) கவர்னர் Vyacheslav Gladkov மாகாண அவசர நிலையை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |