அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓட்டம்! பொதுமக்களுக்கு அறிவுரை
அமெரிக்காவின் சவுத் கரோலினா(South Carolina) மாகாணத்தில் உள்ள யாமசீ(Yemassee) நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்து குரங்குகள் தப்பியோடி உள்ளன.
ஆல்பா ஜெனிசிஸ்(Alpha Genesis) நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் இருந்த 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன.
இந்த குரங்குகள் 'ரீசஸ் மகாக்கே’(rhesus macaque) என்ற வகையைச் சேர்ந்தவை.
ஆய்வுகூட ஊழியர் ஒருவர் கதவை சரியாக பூட்டாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நகர மக்களிடம் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடி வைக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், குரங்குகளுக்கு உணவு வழங்காமல், அவற்றைக் கண்டால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, காணாமல் போன இந்த குரங்குகளை அணுக வேண்டாம் என்றும் காவல்துறை மக்களிடம் தெரிவித்துள்ளது.
தப்பி ஓடிய குரங்குகள் அனைத்தும் பெண் குரங்குகள் என்றும், அவை எந்தவொரு சோதனைக்கும் பயன்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது, குரங்குகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குரங்குகளுக்கு உணவு வழங்கி அவற்றைப் பிடிக்க குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |