பிரபல உணவு விடுதியில் சாப்பிட்ட 43 பேருக்கு கடும் பாதிப்பு
பிரித்தானியாவிலுள்ள பிரபல உணவு விடுதியில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட 43 பேர் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பிரபல உணவு விடுதியில் சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு
வேல்ஸ் நாட்டிலுள்ள Llangynwyd என்னும் கிராமத்தில் உணவு விடுதி ஒன்று உள்ளது. உள்ளூர் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் அந்த பிரபல உணவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு உணவு சாப்பிட்டுள்ளார்கள்.

ஆனால், சாப்பிட்ட பலருக்கு வயிற்றுப்போக்கு முதலான சில பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆய்வகப் பரிசோதனையில் அவர்களில் 43 பேருக்கு Clostridium perfringens என்னும் கிருமியால் food poisoning என்னும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல்
இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |