அமெரிக்காவில் பெற்றோரை இழந்த 43 ஆயிரம் குழந்தைகள்
அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்த அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் 43,000 பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரை கொரோனாவுக்கு இழந்துள்ளனர்.
இந்த இழப்பானது உண்மையில் அவர்களுக்கு துன்பத்தை அளித்தாலும், இது அவர்களின் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும், பாடசாலைகளில் பொருளாதார மட்டங்களில் இது கண்டிப்பாக பல ஆண்டுகளுக்கு அவர்களுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும்பாலான மக்கள் இதுபோன்ற திடீர் இழப்புகளை தனிமையாக எதிர்கொள்வதாக கூறும் ஆய்வாளர்கள், பல குடும்பங்கள் பொருளாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கருப்பின குழந்தைகளின் எண்ணிக்கை 14 சதவீதம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று கணக்கிட்டு பார்த்தால் 20 சதவீத கருப்பின குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.