சுவிஸ் மாகாணம் ஒன்றில் 45 மீற்றர் உயரத்திலிருந்து ஏரிக்குள் பாய்ந்த கார்: சாரதியின் கதி...
சுவிஸ் மாகாணம் ஒன்றில், 45 மீற்றர் உயரத்திலிருந்து ஏரிக்குள் பாய்ந்த ஒரு கார் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, Schwyz மாகாணத்தில், வேகமாக வந்த கார் ஒன்று Lucerne ஏரிக்குள் பாய்ந்துள்ளது.
அந்த கார் ஏரிக்கடியில் 180 மீற்றர் ஆழத்தில் கிடப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் அந்தக் காரை வெளியே எடுக்கும் முயற்சியில் உதவியுள்ளார்கள்.
நேற்று முன்தினம் அந்தக் கார் மீட்கப்பட்ட நிலையில், அந்தக் காரின் சாரதியின் உடல், சாரதி இருக்கையில் இருப்பது தெரியவந்தது. அந்தக் காரில் வேறு யாரும் பயணிக்கவில்லை என கருதப்படுகிறது.
உயிரிழந்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக, அந்த உடல், சூரிச் பல்கலை தடயவியல் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.