ஆப்கானில் பயங்கரம்.. 6 மாதத்தில் 460 குழந்தைகள் படுகொலை! யுனிசெப் வெளியிட்ட பகீர் தகவல்
ஆப்கானிஸ்தானில் 6 மாதத்தில் சுமார் 460 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஆப்கானை விட்டு அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறிய உடனே தாலிபான்கள் அந்நாடு முழுவதையும் கைப்பற்றிவிட்டனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடைவிடாத வன்முறை காரணமாக குறைந்தது 460 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழன் கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தன்னிடம் அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது ஃபாஹிம் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் குழந்தைகளின் நிலை குறித்து யுனிசெப் வருத்தம் தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் குண்டுவெடிப்பு சம்பவங்களால் பல குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
மறுபக்கம் வறுமை, உணவு பஞ்சம், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்ற பிரச்சினைகளால் தவிக்கும் குழந்தைகளும் உயிரிழப்பதாக யுனிசெப் கூறுகிறது.