ஜேர்மனியின் இப்போதைய சேன்ஸலரா, முந்தைய சேன்ஸலரா, யார் திறமை வாய்ந்தவர்?
48% believe Merkel more capable than Merz: 48 சதவிகித ஜேர்மானியர்கள், மெர்ஸைவிட முந்தைய சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் திறமை மிக்கவர் என கருதுகிறார்கள்.
ஜேர்மனியின் இப்போதைய சேன்ஸலரா, முந்தைய சேன்ஸலரா, யார் திறமை வாய்ந்தவர் என மக்கள் கருதுகிறார்கள் என்பதை அறிவதற்காக சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகள்
YouGov அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில், ஜேர்மனியின் முன்னாள் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், இந்நாள் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸைவிட திறமை மிக்கவர் என 48 சதவிகித ஜேர்மானியர்கள் கருதுவது தெரியவந்துள்ளது.

மெர்ஸை விட ஏஞ்சலா, ஜேர்மனி எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள பொருத்தமானவர் என அவர்கள் கருதுகிறார்கள்.
29 சதவிகிதம் பேர், இரண்டு பேருமே சம அளவில் தகுதி படைத்தவர்கள் என கருதுவதாக தெரிவிக்கிறார்கள்.

8 சதவிகிதம் பேர் மட்டுமே, ஏஞ்சலாவை விட, மெர்ஸ், ஜேர்மனி எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள பொருத்தமானவர் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.