பாலைவனத்தில் பழுதான லொறி - குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் உயிரிழப்பு
சஹாரா பாலைவனத்தில் குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாகத்தால் 49 பேர் உயிரிழப்பு
நைஜிரியாவை சேர்ந்த 51 பேர், இஸ்லாமிய மத நிகழ்வு ஒன்றுக்கு மாலி சென்று விட்டு திரும்பிய போது அவர்களின் லொறி பழுதாகி நின்றுவிட்டது.

மாலி மற்றும் அல்ஜீரியாவின் எல்லைகளுக்கு அருகே, அசமகாவிற்கு மேற்கே 80 கிலோமீட்டருக்கும் (49 மைல்கள்) அதிகமான தொலைவில், சஹாரா பாலைவனத்தில் லொறி நின்று விட்டது.
அதில் இருவர் மட்டும் 50 கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று, ஒரு நீர் ஆதாரத்தை அடைந்துள்ளனர்.
அங்கிருந்து, அஸ்ஸாமகாவுக்குச் சென்று அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததன் மூலம் இருவர் உயிர் தப்பியாதாக நைஜரின் அகடேஸ் ஆளுநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், வாகனம் என்ன காரணத்தால், பழுதாகி நின்றது, பயணிகள் எவ்வளவு நேரம் நீரின்றி இருந்தார்கள் என்ற விவரம் உடனடியாக வெளியாகவில்லை.
லொறிக்கு அடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் டஜன் கணக்கான உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.
மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ஒரே இடத்தில் புதைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |