IND vs ZIM 4th T20I: யஷஸ்வி-கில் வெறியாட்டம்., 3-1 தொடரை கைப்பற்றியது இந்திய அணி
T20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி இரண்டு வாரங்களுக்குள் மற்றொரு தொடரை வென்றுள்ளது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.
சனிக்கிழமை நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில் ஆகியோர் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அதிரடி ஆட்டத்தை காட்டினர்.
முதல் ஓவரிலேயே இந்த ஜோடி பவுண்டரி அடித்து இந்திய அணியை சாதனை பார்ட்னர்ஷிப் மூலம் வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது.
ஜிம்பாப்வே நிர்ணயித்த 153 ரன்களை விரட்டியதில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (93 நாட் அவுட்), ஷுப்மான் கில் (58 நாட் அவுட்) ஆகியோர் இரக்கமின்றி பந்துவீச்சாளர்களைத் தாக்கினர்.
பந்து வீச்சாளர் மாறினாலும் பந்து பவுண்டரியை நோக்கி சென்றுகொண்டே இருந்தது. இதன் மூலம் இந்திய அணி இன்னும் 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.
முதல் ஓவரிலேயே யஷஸ்வி 15 ஓட்டங்கள் எடுக்க, கில் ஆக்ரோஷமாக விளையாடினார். யஷஸ்வி 29 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
கேப்டன் கில் மின்னல் அரைசதம் அடித்து ஜிம்பாப்வே வீரர்களையும் பொறுமையிழக்க செய்தார். முஜ்ரபானி வீசிய 16வது ஓவரின் இரண்டாவது பந்தில் யஷஸ்வி பவுண்டரி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IND vs ZIM 4th T20I result, India beat Zimbabwe by 10 wickets, Yashasvi Jaiswal, Shubman Gill