5.5G அறிமுகம் செய்யும் ஜியோ: எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சேவை கிடைக்கும்?
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய அத்தியாயத்தை எழுதும் வகையில், ஜியோ நிறுவனம் 5.5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
5G-யை விட பல மடங்கு வேகமான இந்த தொழில்நுட்பம், நமது இணைய பயன்பாட்டு முறையையே மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5.5G என்றால் என்ன?
5.5G என்பது 5G தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட அம்சமாகும்.
இது 3GPP தரநிலைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 5G-யை விட 5.5G இணைய வேகம் மிக அதிகமாக இருக்கும் என்பதாகும்.
மேலும், இது ஒரே நேரத்தில் பல நெட்வொர்க்களை ஸ்மார்ட்போனுடன் இணைத்து, சிக்னல் குறைபாட்டை குறைகிறது.
5.5G-யின் சிறப்பம்சங்கள்
5.5G மூலம் நொடிக்கு 10GB வரை இணைய வேகத்தை பெறலாம். இது 5G-யை விட 380% அதிகம்.
பல நெட்வொர்க் செல்களுடன் இணைப்பு ஏற்படுத்துவதால், சிக்னல் குறைபாடு இல்லாமல் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்தலாம்.
4K மற்றும் 8K வீடியோக்களை தடையின்றி ஸ்ட்ரீம் செய்யலாம்.
எந்தெந்த போன்களுக்கு 5.5G கிடைக்கும்?
ஒன்பிளஸ் 13, ஒப்போ Find X7, ஹானர் மேஜிக் 6 சீரிஸ், விவோ எக்ஸ் ஃபோல்ட் 3, விவோ எக்ஸ்100 சீரிஸ், ஐக்யூ போன்ற பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் 5.5G-ஐ ஆதரிக்கின்றன. விரைவில் மற்ற ஸ்மார்ட்போன்களிலும் இந்த தொழில்நுட்பம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |